--- --:--:-- --

2026-க்குள் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும்..!

1

2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில் சேவை நடைமுறைக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 நடத்தி வரும் ரைசிங் பாரத் மாநாட்டில் பங்கேற்ற ரயில்வே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

 

ரைசிங் பாரத் என்ற 2 நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில் சிறப்பு விருந்தினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர். இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரையுடன் முதல் நாள் அமர்வு நிறைவு பெறும்.

 

நாளை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார்.ஏற்கனவே 3 முறை ரைசிங் பாரத் மாநாட்டி நியூஸ் 18 குழுமம் நடத்தியுள்ளது. இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. முதல் நாள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள், பல்துறை வல்லுனர்கள் பேசவுள்ளனர்.

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ், ஆசிஷ் சோம்புரா, ராமர் கோயிலை வடிவமைத்த சிற்பி, வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் முதல் நாள் மாநாட்டில் உரையாற்றுகின்றனர்.

 

மாநாட்டில் பங்கேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசியதாவது-ரயில்வேயில் பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தானியங்கி முறையில் ரயில்களில் பாதுகாப்பு அம்சங்கள் 1980களிலேயே பல நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் அதன்பின்னர் இந்தியாவில் அமைந்த அரசுகள் எதுவும் இதில் கவனம் செலுத்தவில்லை.

 

பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு தானியங்கி பாதுகாப்பு முறைக்கு முக்கியத்துவம் அளித்து, அதில் முதலீடுகளை செய்துள்ளோம். இந்தியாவில் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு வரும். என்று தெரிவித்தார். அவரை தொடர்ந்து இன்னும் பல விருந்தினர்கள் பேசவுள்ளனர்.

 

Right Menu Icon