சக மாணவிகள் முன்னாள் ஆடைகளை கலைத்த கொடூர ஆசிரியை..!
கர்நாடகாவில் திருடியதாக குற்றம்சாட்டி சக மாணவிகளை வைத்து ஆசிரியை ஆடைகளை களைந்து சோதனை செய்ததால் மனம் உடைந்து எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஜெயஸ்ரீ என்பவர் தனது பள்ளியில் இருந்த ஏழு ஆயிரம் ரூபாய் பணம் மாயமான விவகாரத்தில் அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மீது சந்தேகம் எழுந்துள்ளது.
அப்பொழுது ஆசிரியை மாணவியிடம் பணம் குறித்து கேட்க தான் எடுக்கவில்லை என மாணவி கூறியுள்ளார். எனினும் அதனை ஏற்க மறுத்த ஆசிரியை மாணவியின் ஆடைகளை சக மாணவிகளை கொண்டு கலைத்து சோதனை நடத்தியுள்ளார்.
இதனால் மிகுந்த அவமானத்துடன் வீடு திரும்பிய மாணவி மன வேதனையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






