இன்று தொடங்குது டிக்கெட் விற்பனை..!
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில், சென்னை பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மார்ச் 18 ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிகளுக்கான டிக்கெட் விலை ஒரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுகிறது.
இப்போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் 18 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு Paytm செயலி மற்றும் insider.in இணையதளம் மூலம் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிக்கெட் விலையை பல மடங்கு சிஎஸ்கே நிர்வாகம் உயர்த்தியுள்ளது. கடந்த முறை I J K ஸ்டன்ட்களுக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 4 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. C, D, E லோயர் இருக்கைகளுக்கான கட்டணம் 200 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






