--- --:--:-- --

பூமிக்குள் சிக்கிய சடலம்.. தனியே மேலே வந்த தலை..!

4

தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டும் பொழுது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

 

மாநகராட்சி சார்பில் நடைபெறும் இந்த பணிகள் ஒப்பந்ததாரரிடம் விடப்பட்டது. இந்த நிலையில் குழாய் அமைப்பதற்காக 15 அடி பள்ளம் தோண்டப்பட்டு பள்ளத்தில் இருக்கும் ஊற்று நீரை அகற்றும் பணி நடைபெற்றது.

 

இதில் முருகானந்தம், சண்முகசுந்தரம் ஆகிய இரண்டு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பள்ளத்தில் திடீர் என மண்சரிவு ஏற்பட்டது. இதில் சண்முகசுந்தரம் மீட்கப்பட்டதையடுத்து முருகானந்தம் சிக்கி உயிரிழந்தார்.

 

இதனையடுத்து ஜேசிபி மூலம் முருகானந்தத்தின் உடலை மீட்க முயன்ற பொழுது அவரது தலை தனியாக வந்தது. இந்த நிலையில் ஒப்பந்ததாரர் மற்றும் ஜேசிபி ஓட்டுனரிடம் விசாரணை பெற்று வந்தது.

 

Right Menu Icon