--- --:--:-- --

திருப்பூரில் சிறுமியை கடத்தி விடிய விடிய வன்கொடுமை..!

3

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் 17 வயது சிறுமி கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வெள்ளக்கோயிலில் கடந்த ஒன்பதாம் வீரக்குமாரசுவாமி கோயிலில் கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்றது. அதிகாலை வரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கூட்டு வன்கொடுமை செய்து அதிகாலை கோயில் அருகே விட்டுவிட்டு சென்றிருக்கிறது. இது குறித்து தாயிடம் சிறுமி கூறியுள்ளார்.

 

இதையடுத்து தாய் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் தொடர்புடையதாக பிரபாகரன், மணிகண்டன், தினேஷ், சதீஷ், நவீன் குமார், நந்தகுமார், பாலசுப்பிரமணியம் ஆகிய ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon