’10 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி..!
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த செயற்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் மாநிலங்களில் போட்டியிட முடிவு செய்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறினார். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியோடு நாடளுமன்ற தேர்தலிலும், சட்டபேரவை தேர்தலிலும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்த அவர், தெலுங்கானவில் 10 நாடளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறினார்.
கர்நாடாகவில் 6 நாடளுமன்ற தொகுகளிலும், கேராளாவில் 3 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறிய அவர்,இந்தியா கூட்டணியின் வெற்றி பாதிக்காத வகையில் வி சிக தென்மாநிலங்களில் போட்டியிடும் என்றார். மின்னனு வாக்கு பதிவு எந்திரங்களில் வி வி பேட் இணைக்க வலியுறுத்தி ஆந்திரா, கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் வி சிக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் திருமாவளவன் கூறினார்.
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், ஏற்கனவே 3 தொகுதிகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக கூறினார். பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஜெயக்குமாருக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் விரும்பும் இடங்களும் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற அந்த கொள்கையில் உறுதியாக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




