239 பேருடன் மாயமான விமானம்.. மலேசியா அரசு எடுத்த திடீர் முடிவு..!
10 ஆண்டுகளுக்கு முன் 239 பேருடன் காணாமல் போன விமானத்தை மீண்டும் தேடும் பணியில் மலேசியா அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது.
அப்பொழுது காணாமல் போனது இந்த விமானத்தில் பெரும்பாலான சீடர்கள் பயணித்ததால் மலேசியா விமானத்திற்கு எதிராக சீனாவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாசை சேர்ந்த நவீன தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மலேசியா ஈடுபட்டு வருவதாக நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





