கல்லூரி மாணவியை கடத்திச் சென்று நண்பனுக்கு திருமணம் செய்து வைத்த உத்தமர்கள்..!
நண்பனுக்காக முகமூடி அணிந்து கல்லூரி மாணவியை கடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த ஹரி அரவிந்த் என்பவரும், இளம்பிள்ளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரகதீஸ்வரியும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவரிடம் திருமண ஏற்பாடு செய்தனர். இந்த நிலை 7 நண்பர்கள் முகமூடி அணிந்து கல்லூரி மாணவியை கடத்திச் சென்று நண்பனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் வீட்டார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





