பணிப் பெண்ணை தள்ளி போகக்கூறிய ரஜினிகாந்த்.. சர்ச்சை வீடியோ..!
தொழிலதிபரும் இந்தியாவின் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பாணிக்கும் ராதிகாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் ஜூலை மாதம் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் இவர்களது பிரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தொடர்ந்தது. அதன்படி நேற்று முன்தினம் ஆனந்த் அம்பாணி மற்றும் ராதிகா ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் கலைகட்ட துவங்கிய நிலையில் இதில் ஏராளமான திரையர பிரபலங்கள் வருகை தந்தனர்.
அம்பானியின் வீடு ப்ரீ வெட்டிங் விசேஷத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக டி-ஷர்ட் மற்றும் லோயர் உடன் வந்து பலரையும் வியக்க வைத்தது. ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினி காந்தும் எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி மிகவும் எளிமையாக காட்டன் சல்வார் உடுத்தியுள்ளார். ஐஸ்வர்யா கொஞ்சம் மாடர்னாக வந்திருந்தார்.
பலர் ரஜினிகாந்த் இவ்வளவு சிம்பிளாக வந்ததை பற்றி பேசினாலும் சிலர் ரஜினிகாந்த் தனது பணிப்பெண்ணுக்கு செய்ததுதான் ஹார்ட் ஆக பேசப்படுகிறது.
புகைப்படக்கலைஞர்கள் போட்டோ எடுப்பதை அறிந்துகொண்ட ரஜினிகாந்த் வேலைக்கார பெண்ணை மட்டும் போ போ என போக சொல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





