--- --:--:-- --

ஆன்லைனில் முட்டை ஆஃபர்.. பெண்ணுக்கு 48 ஆயிரம் ரூபாய் அபேஸ்..!

10

49 ரூபாய்க்கு 48 முட்டை என ஆஃபருக்கு ஆசைப்பட்டு பெங்களூருவில் பெண் ஒருவர் 48 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த அர்ச்சனாசிங் என்பவரது இமெயிலுக்கு அது 49 ரூபாய்க்கு 48 முட்டைகள் விற்பனை செய்வதாக விளம்பரம் வந்துள்ளது.

 

இதனை நம்பி அர்ச்சனா சிங் ஈமெயிலில் இருந்த லிங்கை கிளிக் செய்து கிரெடிட் கார்டு தகவல்களை கொடுத்துள்ளார். அவர் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் பதிவு செய்து 49 ரூபாயை அவர் செலுத்தியுள்ளார். அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு காட்டிலிருந்து 48 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.

 

அதன் பிறகு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அர்ச்சனாசிங் மோசடி குறித்து சைபர் கிரைம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்று ஆஃபர் என கூறி வரும் மெசேஜ் இமெயிலில் வந்த தகவல்களை கொடுக்க வேண்டாம் என்று காவல்துறையினர்
கூறியுள்ளனர்.

 

Right Menu Icon