அரசு மருத்துவமனையில் காலியான படுக்கையில் நாய்கள்..!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கும் அறையில் நாய்கள் படுத்திருந்ததால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையை சுற்றியும் வளாகத்திலும் மாணவர்களின் விடுதிகளிலும் நிறைய நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் காலியாக உள்ள படுக்கைகளில் நாய்கள் வந்து படுத்துக் கொள்கின்றன எனக் கூறும் நோயாளிகள் இன்று அதிகாலை காய்ச்சல் சிறப்பு பிரிவு வாரிலுள்ள படுக்கையில் படுத்திருந்ததாக கூறுகின்றனர்.





