தண்ணீர் தேடி ஊருக்குள் உலா செல்லும் ஏராளமான காட்டு யானைகள்..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காட்டு யானைகள் குட்டிகளுடன் உணவு தண்ணீரை தேடி ஊருக்குள் உலா வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோடை தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் ஏராளமான காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா சென்றனர். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உள்ளூர் வாசிகள் அச்சம் உடனே இருப்பதாக கூறுகின்றனர்.
வனப்பகுதியில் வளர்ச்சியின் காரணமாக இந்த காட்டு யானைகள் கூட்டமாக கிராமப் பகுதிகளுக்குள் வருவதாக கூறும் வனவிலங்கு ஆர்வலர்கள் வனப்பகுதிகளை குட்டைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





