கடற்கரையில் செல்பி எடுக்கும் பொழுது அலையில் சிக்கி மாணவி பலி..!
கன்னியாகுமரி அருகே கடற்கரையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த பொழுது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஒரு மாணவி உடல் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தர்ஷினி மற்றும் சச்சிதா. இவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். மற்றொரு தோழியுடன் கடற்கரைக்கு சென்ற தர்ஷினி தோழியுடன் கடற்கரையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென்று வந்த அலையில் சிக்கி தர்ஷினி மற்றும் சஜிதா எடுத்துச் செல்லப்பட்டனர். அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் கடலுக்குள் தேடி மாணவி சஜிதா உடலை மீட்டனர். மேலும் கடலோர காவல் படை தர்ஷினியை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





