--- --:--:-- --

திருப்பூரில் பாஜக மாநாடு – பிரதமர் மோடி பேசியது என்ன?

1

2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி சூளூர் விமான நிலையித்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதாப்பூரில் நடைபெற்ற பாஜகவின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்றார்.

 

திறந்த வெளி வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடி, இருபுறமும் திரண்டு இருந்த தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி வந்தார். வாகனத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் நின்றனர்.

 

தாமரை வடிவில் அமைக்கப்பட்ட பொதுக் கூட்ட மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, ஜல்லிக்கட்டு காளை நினைவுச் சின்னத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசாக அளித்தார்.பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற காரணமாக இருந்தவர் மோடிதான் என்றார்.

 

பல்லடம் பொதுக்கூட்டம் சரித்தர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார். தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.,க்களை டெல்லிக்கு அனுப்பும் வரை ஓய்வு என்பதே இல்லை. தோடர் மக்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்திருப்பதால், தோடர் பாரம்பரிய சால்வையை மோடிக்கு பரிசாக அளித்தோம்.

 

தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் மோடியின் சாதனை ஆட்சி அடையாளமாக உள்ளது. 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க கைப்பற்றுவதற்கு தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.வணக்கம் என சொல்லி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். ஜவுளித்துறையில் சிறப்பு வாய்ந்த நகரமாக திருப்பூர் உள்ளது மிகப்பெரிய அளவில் இங்கு கூடியுள்ள மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும் போது காவிக்கடலை பார்ப்பது போல உள்ளது.

 

கொங்கு மண் தொழில் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் இந்த பகுதி மிக முக்கியமானது. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.ஆயிரக்கணக்கான மக்களின் ஆசிர்வாதம் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

என்னை மிகவும் கவர்ந்த மொழியாக தமிழ் திகழ்கிறது. தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டுடனான என உறவு இதயப்பூர்வமானது. 370 பிரிவு ரத்துக்குபிறகு காஷ்மீர் சட்டப்பேரவையில் மூவர்ணக் கொடி பறப்பது எனக்கு பெருமிதமான ஒன்று. மத்தியில் உள்ள பாஜக அரசு, தமிழ்நாட்டு அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.

 

தமிழ்நாட்டு மக்கள் சிறந்த அறிவாளிகள்- எதிர்க்கட்சியினரின் பொய்ப்புரட்டுகள் மக்களிடம் எடுபடாது.மத்தியில் காங்கிரசும், திமுக கூட்டணி ஆட்சி அமைத்திருந்தபோதும் தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் கொடுத்த நிதியைவிட தற்போது மூன்று மடங்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது. மோடியின் உத்தரவாதத்தின்படி தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு 2 நன்மைகள் கிடைக்கும். தமிழ்நாட்டில் 40 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம். மோடி உத்தரவாதம் என்பது பல ஆண்டு காலத்துக்கு நாட்டில் உள்ளவர்களுக்கு பலன் அளிக்கும்.

 

வந்தே மாதரம் என்று பிரதமர் மோடி கூற, மேடையில் இருந்தவர்களும் மாதரம் என்றனர்.கூட்டத்தில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன், தமிழருவி மணியன் பங்கேற்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon