--- --:--:-- --

அப்பா செய்த தவறால் தற்கொலை செய்து கொண்ட மகன்..!

11

திருட்டு சம்பவத்தில் கைதாகி தந்தை சிறைக்கு சென்றதால் அவமானம் தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சில தினங்களுக்கு முன்பு பாஜக நிர்வாகியான பிரித்விராஜ் என்பவர் வீட்டில் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது.

 

இந்த திருட்டு சம்பவ சிசிடிவி காட்சிகளை வைத்து மாணிக்கம் என்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகன் கர்ணன் என்பவன் அவமானம் தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon