--- --:--:-- --

ஓசூர் அருகே காணாமல் போன மாணவர்.. கருகிய நிலையில் உடல் மீட்பு..!

8

ர்நாடக பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பி டெக் மாணவர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் ஓசூர் அடுத்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பீ.டெக் பயின்று வந்தார்.

 

விடுதியில் இருந்து வழக்கமாக கல்லூரி பேருந்தில் செல்லும் அவர் கடந்த 21 ஆம் தேதி அவ்வாறு செல்லவில்லை. மாலை விடுதிக்கும் வரவில்லை. அதையடுத்து விடுதி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

மாணவர் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் கிராமத்தில் உள்ள தோப்பு ஒன்றிலிருந்து மாணவரின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மாணவரை எரித்துக் கொன்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon