--- --:--:-- --

12 வயது சிறுமியை கடத்திய கும்பல்.. ஊரே ஒன்று கூடி எடுத்த முடிவு..!

9

பெரம்பலூர் மாவட்டம் திண்ணம் அருகே 12 வயது சிறுமி கடத்தப்பட்ட புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களையும் கைது செய்ய கோரி அந்த பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற மாசிமக திருவிழாவின் போது அக்ஷயா என்ற சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்ற நிலையில் சிறுமி அவர்களிடமிருந்து சாதுரியமாக தப்பினார்.

 

சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பெரம்பலூரில் தங்கி படித்தவரும் கடலுரை சேர்ந்த ஹரிதரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon