மைதானத்தில் சர்பராஸ் கானை கடிந்த ரோஹித் சர்மா..!
ராஞ்சியில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இன்றைய நாள் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றால் தொடரையும் கைப்பற்றும்.
முதல் இன்னங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்தது. 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் என்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தியா, துருவ் ஜுரலின் அபார ஆட்டத்தால் 307 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
46 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 192 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்களை சேர்த்துள்ளது. வெற்றி பெறுவதற்கு 152 ரன்கள் மட்டுமே தவைப்படும் நிலையில், இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே நேற்றைய போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா, இளம் வீரர் சர்பராஸ் கானை கடிந்த வீடியோ வெளியாகி உள்ளது.
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டைகளை வேட்டையாடி கொண்டிருந்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது பேட்ஸ்மேன்களில் அருகில் ஃப்ல்டிங் செய்வது வழக்கம். அப்படி அருகில் ஃப்ல்டிங் செய்யும் போது பந்து அவர்கள் மீது தாக்கினால் காத்துக்கொள்ள ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும். ஆனால் சர்பராஸ் கான் ஹெல்மெட் அணியாமல் அருகில் ஃப்ல்டிங் செய்ய வந்தார். இதை கவனித்த ரோஹித் சர்மா, அதிகமாக ஹீரோவாக இருக்காதீர்கள்.
நீங்கள் அந்த இடத்தில் பீல்டிங் செய்யும்போது, எந்த ஆபத்தும் எடுக்காதீர்கள்” என்று சர்பராஸ் கானை நோக்கி கேட்டார். போய் ஹெல்மெட் எடுத்து வா என்ற அவர் கூறும் வீடியோவில் ரோஹித் சர்மாவின் குரல் தெளிவாக கேட்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சர்பராஸ் கான் முதல் போட்டியிலேயே சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் அவர் இந்தியாவின் நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார்.
ஆனால் காயம் காரணமாக வீரர்கள் போட்டியில் இருந்து விலகி வரும் நிலையில் சர்பராஸ் கானுக்கும் எந்த காயமும் ஏற்பட கூடாது என்ற எண்ணத்திலேயே கேப்டன் பொறுப்பில் இருக்கும் ரோஹித் சர்மா அவரை கடிந்து கொண்டதும் சரியான அனுகுமுறை தான் கூறப்படுகிறது.





