பிப்., 28-ல் திமுக –மக்கள் நீதி மய்யம் தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தத்தமது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதில், அதிமுக சார்பில் இதுவரை எந்தவொரு தொகுதிப் பங்கீடும் இறுதி செய்யப்படவில்லை.
அதேவேளையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இரண்டாம கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம் தொகுதி ஐயூஎம்எல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தற்போதைய எம்.பி., நவாஸ் கனி மீண்டும் ஏணி சின்னத்தில் அங்கு போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கும், கடந்த முறையைப் போல நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று மணிரத்னம் இயக்கும் THUG LIFE படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக வருகின்ற 29 ஆம் தேதி வெளிநாடு செல்கிறார். எனவே, அதற்கு முன்பாக 28 ஆம் தேதிக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து விட்டு வெளிநாடு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஓரிரு இடங்கள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து இரு கட்சிகளும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
மேலும், கடந்த முறை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால், இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படாததால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணையுமா அல்லது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடத்தல் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், திமுக நிர்வாகிகளை நாளை சந்தித்து இரண்டாம் கட்ட பேச்சுவாத்தை நடத்த உள்ளனர். மேலும், வருகின்ற 27 ஆம் தேதி திமுக – காங்கிரஸ் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து மறுநாள் 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





