--- --:--:-- --

மகளிருக்கான முக்கிய பட்ஜெட் அறிவிப்பு..!

1

மிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2024-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். இதில் மகளிர் நலனுக்கான ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

பெண்களின் உயர்கல்விக்கு உதவும் புதுமை பெண் திட்டத்தை வரும் நிதியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

 

சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும். மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ. ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

 

முதலமைச்சரின் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இலவச பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 40 % இருந்து 65% உயர்ந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.3,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், மலைப் பகுதிகளில் வாழும் மகளிர் பயன்பெறும் வகையில், நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.வரும் நிதியாண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon