வரும் 25ஆம் தேதி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர்..!
புதுச்சேரியில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வரும் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார்கள் என புதுச்சேரி சபாநாயகர், செல்வம் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் புதிதாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் காரைக்கால் மாவட்டத்தில் 460 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி மாநிலங்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இரண்டு இடங்களிலும் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் வரும் 25ஆம் தேதி அவர்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். அதன் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





