ஆப்ரேஷன் தியேட்டரில் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்..!
திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமண ஜோடி மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுத்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வரும் அபிஷேக் என்பவருக்கும் மற்றொரு பெண் மருத்துவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் வித்தியாசமான முறையில் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் எடுக்க திட்டமிட்ட ஜோடி மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ சூட் எடுத்துள்ளனர். இதன் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.





