முஸ்லீம் இளைஞருடன் சென்ற இந்து பெண்ணை தாக்கிய இந்து அமைப்பினர்..!
மங்களூரில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நண்பருடன் சுற்றுலா சென்ற ஹிந்து பெண்ணை இந்து அமைப்பினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில மங்களூரில் உள்ள பணம்பூர் கடற்கரைக்கு பெங்களூருவை சேர்ந்த ஹிந்து பெண் ஒருவர் தன்னுடைய இஸ்லாமிய நண்பருடன் சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கிருந்த இந்து அமைப்பினர் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஏன் ஒன்றாக இருக்கிறீர்கள் என கேட்டு இருவரை மிரட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பேரில் இந்து அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





