--- --:--:-- --

சிறுமியின் கம்மலை பறித்துவிட்டு நடுரோட்டில் விட்டுச் சென்ற மர்ம நபர்கள்..!

9

ஈரோட்டில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம நபர்கள் கம்மலை பறித்துக் கொண்டு சிறுமியை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிருஷ்ணா பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

 

அப்பொழுது சிறுமியை மர்ம நபர்கள் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு பெற்றோருடன் சேர்ந்து தேடிய பொழுது சிறுமியை கடத்தியவர்கள் தங்க கம்மலை கழற்றிவிட்டு சாலையில் விட்டு சென்றது தெரிய வந்தது.

 

சிறுமி காதில் அணிந்திருந்த கவரிங் கமலை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon