மேட்டரி மோனி மூலம் அறிமுகமாகி பல ஆண்கள் வாழ்க்கையில் விளையாடிய பெண்..!
திருமண தகவல் மையம் மூலம் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட நபர் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக புதுச்சேரியை சேர்ந்த திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.
அறிமுகமான ஹேமா மாலினி என்ற பெயர் ஞானசேகரை திருமணம் செய்து கொண்டு சில மாதங்கள் அவருடன் வசித்து வந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் ஹேமா மாலதியின் செல்போனை பரிசோதனை செய்த பொழுது அவர்கள் ஆண்களை திருமணம் செய்து கொள்வதாக பல லட்சம் ரூபாயை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
வசமாக சிக்கிய ஹேமா மாலதி ஞானசேகரனிடம் இருந்து தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஞானசேகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.





