ஒரே நாடு என சொல்லிக்கொண்டு இப்படி செய்யலாமா என திருச்சி சிவா கேள்வி..!
தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டினார். மத்தியரசுக்கு அதிக அளவில் நேரடி வருவாய் தரும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். தாங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 காசுகள் மட்டுமே திரும்ப வருகிறது.
உத்தரபிரதேசம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூபாய் 2.73 திரும்ப வருகிறது ஏன்? இந்த ஏற்றத்தாழ்வு ஏன்? இந்த பாகுபாடு ஒரே இந்தியா என சொல்லிக்கொண்டு இப்படி செய்யலாமா? என திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.





