--- --:--:-- --

குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொலை செய்த மகன்..!

3

சிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தர மறுத்த தாயை கட்டையால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட சேர்ந்தவர் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

இதில் மூத்த மகன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பணம் கேட்டு தாயுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி மது அருந்த பணம் கேட்டுள்ளார்.

 

பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் தாயை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடினார். இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மகனை கைது செய்தனர்.

 

Right Menu Icon