--- --:--:-- --

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் கைதாவார்கள் : அமைச்சர் உதயநிதி

1

பிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஒரே நேரத்தில் கைதாவார்கள் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை பெரியார் திடலில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத் துறை அமைச்ச உதயநிதி ஸ்டாலின், 7 லட்சம் இளைஞர்கள் சேலம் மாநாட்டில் பங்கேற்றனர். இந்தியாவே நம் மாநாட்டை உற்று நோக்கியது, அந்தளவுக்கு மாநாட்டை நடத்தி காண்பித்தோம். வாய்ப்பு கிடைத்தால் மத்திய சென்னையில் போட்டியிடுவேன் என தயாநிதி மாறன் கூறுகிறார்.

 

ஆனால் அவரே வேண்டாம் என்று சொன்னாலும் திமுக நிர்வாகிகள் நீங்கள் அவரை விடமாட்டீர்கள், எனவே உங்களுக்கு சிரித்த முகத்துடன் உள்ள வேட்பாளர் கிடைப்பார்.சின்னவர், வாழும் பெரியார் போன்ற பட்ட பெயர்கள் வேண்டாம், தொகுதி ஒருங்கிணைப்பு குழுவில் பங்கேற்ற நிர்வாகிகள் சொன்னதை வைத்து பார்த்தால் 40 தொகுதியில் வெற்றி வாய்ப்பு நமக்குதான்.

 

ரூ.1,000 மகளிர் ஊக்க தொகை கிடைக்காதவர்களின் பட்டியல் கொடுத்தால், அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை கொடுத்து பேசுங்கள் என கூறினார். நான் அடுத்த நாளே மரியாதை கொடுத்தேன். ஆனால் நான் கேட்ட நிதியை அவர்கள் கொடுக்கவில்லை.

Right Menu Icon