பூஜைக்கு பின் நெற்றியில் பொட்டு வைக்க மறுத்த கர்நாடக முதல்வர்..!
கர்நாடகாவில் பூஜைக்கு பின்னர் நெற்றியில் பொட்டு வைக்க முதலமைச்சரின் சித்தராமையா மறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விஜயநகர மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு விழாவில் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்பொழுது பூஜை நடைபெற்ற நிலையில் முதல்வருக்கு நெற்றியியில் பொட்டு வைக்க அர்ச்சகர் முயன்றார்.
ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சித்தராமையா கூறியதால் அர்ச்சகர் அமைதியானார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.






