--- --:--:-- --

பஞ்சாப் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் பன்வாரிலால் புரோகித்..!

1

ஞ்சாப் ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோகித் தனிப்பட்ட காரணங்களுக்காக திடீர் ராஜினாமா செய்தார். “எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகள் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.

 

தயவு செய்து அதை ஏற்றுக்கொண்டு ஆவண செய்யுங்கள்” என்று பன்வாரிலால் புரோஹித் தனது ராஜினாமா கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

 

நாக்பூரில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்வான பன்வாரிலால் புரோஹித், முன்பு தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநராக பணியாற்றியுள்ளார்.

 

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்துடன் நீண்ட காலமாக வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்த பன்வாரிலால் புரோகித், மாநிலம் தொடர்பான பல பிரச்சனைகளில் விளக்கம் கேட்டு முதல்வர் பகவந்த் மானுக்கு தொடர்ச்சியான கடிதங்களை அனுப்பினார். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா செய்துள்ளார்.

Right Menu Icon