--- --:--:-- --

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய கைப்பந்து வீரர்.. அதிர்ச்சியில் மக்கள்..!

7

தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த பிலோமின் ராஜ் புதுச்சேரி நேஷனல் அளவில் கூடை பந்து விளையாட்டு வீரராக இருந்து வந்த இவர் பைபர் கேபிள் இணைக்கும் பணியையும் மேற்கொண்டு வந்தார்.

 

இவருக்கு திருமணம் ஆகி கனிமொழி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். வழக்கம்போல வேலைக்கு சென்ற பிலோ மின்ராஜ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

இந்த நிலையில் காலி குப்பம் கடற்கரை பகுதியில் ரத்த காயங்களுடன் பிலோமின் ராஜ் இறந்து கிடந்தது தெரிய வந்தது. கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தகவலறிந்து வந்து காரைக்கால் அரசு மருத்துவமனை முன் ஒன்று கூடிய உறவினர்கள் பிலோமின் ராஜ் உடலை கண்டு கதறி அழுதது வேதனை அளித்தது. சமீபத்தில் நடந்த கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கையில் முதல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon