அப்பாவை இழந்த ஒன்றரை வயது குழந்தை.. உடல் சிதறி பலியான மகன்..!
நக்சல் தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த crpf வீரரின் உடல் என்று சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கடந்த 30ஆம் தேதி நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் குடியாத்தம் அடுத்த பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரும் ஒருவர் ஆவார். தேவன் உடல் இன்று அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் தேவனுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளான நிலையில் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தேவனின் மனைவிக்கு அரசு வேலை வழங்குமாறு தேவனின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





