நகை கடையில் 40 கிராம் தங்க நகைகளை திருடிய பெண்கள்..!
வேலூரில் உள்ள தனியார் நகைக்கடையில் 40 கிராம் தங்க நகைகளை திருடிய பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் கடந்த 21 ஆம் தேதி வாடிக்கையாளர்கள் போல் வந்து இரண்டு பெண்கள் 40 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கடையின் மேலாளர் சிசிடிவி ஆதாரத்தோடு புகார் அளித்தார்.
அந்த சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பா மற்றும் காந்திமதி என்பது தெரிய வந்தது. திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் தேடி வந்த காவல்துறையினர் வேறொரு புதிய பேருந்து நிலையத்தில் வந்து இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 40 கிராம் தங்க நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தனியார் நகைக்கடை மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





