திருப்பூரில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பிப்.2 ல் உள்ளூர் விடுமுறை
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு, நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 2ம் தேதி அன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு!!
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு, நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பிப்ரவரி 2ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று ஒரு நாள் மட்டும் உள்ளுர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது.
விடுமுறை நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 3ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள பிப்ரவரி 2ம் தேதியன்று அரசு அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம், மற்றும் சார்நிலைக் கருவூலங்கள்; குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்தள்ளார்.





