--- --:--:-- --

15 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை..!

9

15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தையின் இரட்டை ஆயுள் தண்டனையை கேரள உயர்நீதிமன்ற உறுதி செய்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு விடுதியில் தங்கி பிளஸ் ஒன் படித்து வந்த மகள் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த நிலையில் அவரை தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

 

இதில் மகள் கர்ப்பமானதை அறிந்த பெண்ணின் தாய் தொடர்ந்த வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்ணின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

 

குழந்தையின் டிஎன்ஏ டெஸ்டிலும் பெண்ணின் தந்தை தான் குற்றவாளி என்பது தெளிவாக தெரிந்தது. அதையடுத்து அவருடைய வழக்கை நிராகரித்த நீதிபதிகள் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon