ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம்..கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!
கேரள மாநிலத்தில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்பட உள்ளது. சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்குள்ளாவது என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
அது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்த போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
சம்மந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் வருகிற கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.






