பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்ற அர்ச்சனா..!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, தினேஷ், கானா பாடகர் பாலா, ஆர்.ஜே.பிராவோ, பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்து மீண்டும் பூகம்பம் டாஸ்க் மூலம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களான அனன்யாவும், விஜய் வர்மாவும் உள்ளே சென்றனர்.தொடர்ந்து டாப் 5 போட்டியாளர்களாக விஷ்ணு, மாயா, தினேஷ், மணி, அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், முதலில் விஷ்ணு வீட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து தினேஷ் வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து 2வது ரன்னராக மாயாவும், முதல் ரன்னராக மணியும் அறிவிக்கப்பட்டார். இறுதியில் அர்ச்சனா வெற்றி வாகையை சூடி உற்சாகத்தில் துள்ளிகுதித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




