ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த கும்பல்..!
மதுரையருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற ரவுடியை வழிமறித்து மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை அலங்காநல்லூர் அருகே ரவுடி பிரசாத் சோழவந்தான் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
அப்பொழுது காரில் வந்த கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பிரசாரத்தை ஓட ஓட விரட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த ரவுடி பிரசாத் கடந்த 2016 இல் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் என்றும் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலவையில் இருப்பதும் தெரிய வந்தது. பழிக்கு பலியாக நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





