16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடிக்கு அதிரடி தண்டனை..!
புதுச்சேரியில் கடந்த 2018 ஆம் ஆண்டு உறவினரின் மகளான 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த ரமணா என்ற ரவுடிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






