கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விநாயகர் சிலை இடிப்பு..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சர்ச்சைக்குள்ளான விநாயகர் கோயில் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.
சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்ததாரர் மூலம் கட்டப்பட்ட இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிவசக்தி விநாயகர் கோயில் சிறிய அளவில் கட்டப்பட்டிருந்தது.
அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் வழிபாட்டு தலங்கள் இருக்கக் கூடாது என இந்த கோயில் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இரவோடு இரவாக கோயில் இடிக்கப்பட்டுள்ளது.





