பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது..!
பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 9ம் தேதி நடந்த வன்முறை மற்றும் ராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து இம்ரான் மீதான வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த பொழுது பாதுகாப்பு கருதி காணொளி வாயிலாக இம்ரான் கான் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்பொழுது அவரை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். அப்பொழுது சிறைக்கு சென்ற இம்ரான் கானிடம் விசாரணை நடத்தலாம் என்று அனுமதி அளித்தார்.





