கலைஞர் 100 விழாவில் திரண்ட தமிழ் சினிமா நட்சத்திரங்கள்..!
சென்னையில் நடைபெற்று வரும் கலைஞர் 100 விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞருக்கு, நூற்றாண்டு விழா இன்று நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் விழாக்கோலம் கண்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ரஜினிகாந்த், நயன்தாரா, லைகா புரொடக்சன்ஸ் சுபாஷ்கரன், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல் வரிசையில் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா என்டரி ஆகும் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் கார்த்தி, கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோரும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், கலைஞர் 100 விழாவுக்கு யாரெல்லாம் வரவில்லை என சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட சென்றவர்கள் மற்றும் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்களால் இந்த விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விடா முயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அசர்பைஜான் நாட்டில் உள்ளார். இதேபோன்று வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடச் சென்ற விஷால், சிம்பு, விக்ரம் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





