ஆஸ்திரேலிய ஓபன் தொடர் இன்று தொடக்கம்..!

மெல்பர்ன் நகரில் தொடங்கும் போட்டியில், முன்னணி வீரர்கள் ஜோகோவிச், அல்கராஸ், மெத்வதேவ், சிட்சிபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முன்னணி வீரர் ரஃபேல் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. மகளிர் பிரிவில், ஸ்வியாடெக், சபலிங்கா, கோகோ காஃப் உள்ளிட்ட வீராங்கனைகளும் களம் இறங்குகின்றனர்.

 

வழக்கமாக திங்கள்கிழமை தொடங்கி, 14 நாட்கள் நடைபெறும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர், இம்முறை ஒரு நாள் முன்னதாகவே தொடங்குகிறது. வீரர்கள் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி களைப்படைவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முன்னதாகவே போட்டி தொடங்குகிறது.

 

மேலும், கடந்த ஆண்டைவிட பரிசுத் தொகையும் 13 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 17 கோடியே, 72 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.