மனைவி தெரியாமல் தள்ளி விட்டதில் சேப்பாக்கம் மைதான காவலாளி மரணம்..!
மது போதையில் தகராறு செய்த கணவரை மனைவி கீழே தள்ளி விட்டதில் கணவர் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
பாலகிருஷ்ணன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளி இவருக்கு கனகவல்லி என்பவர் உடன் திருமணமாகியுள்ளது. பாலகிருஷ்ணன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு பாலகிருஷ்ணனை அவரது மனைவி கீழே தள்ளிவிட்டு இருக்கிறார்.
விழுந்த பாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை வழக்காக பதிவு செய்த பாலகிருஷ்ணனின் மனைவியை போலீசார் கைது செய்த நிலையில் தம்பதியின் மகன்களான இரண்டு மகன்களும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியது.





