அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கிய பெண்..!
திண்டுக்கல் மாவட்டம் ஆர்.என்.காலனி 12வது குறுக்கு தெருவில் உள்ள நான்குமாடி குடியிருப்பில் ஈஸ்வரி என்ற பெண் வசிக்கிறார். இவர் லிப்டில் இறங்கிய பொழுது லிப்ட் பழுதாகி நின்று போனது.
லிப்டின் கதவுகளை திறக்க முடியவில்லை, ஈஸ்வரியின் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரி சிவகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து ஈஸ்வரியை மீட்டனர்.






