--- --:--:-- --

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகைக்காக டோக்கன்..!

4

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வழங்கும் நிவாரணத் தொகை காண டோக்கன் வினியோகம் தொடங்கியது.

 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை போல மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கும் தமிழக அரசின் 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது. அதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிக பாதிப்புகளை சந்தித்த நெல்லை, சேரன் மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்டது

 

Right Menu Icon