உத்தரகாண்ட் எலிவளை தொழிலாளர்கள் அதிருப்தி.. காசோலையை அரசிடம் திருப்பி தர முடிவு..!
உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிக்கான ஊதியம் போதாது என எலிவளை தொழிலாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் சுரங்க பாதையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது.
இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர் இதில் மீட்கும் பணியில் எலிவளை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். எலி வலையை தொழிலாளர்கள் உயிரை பணயம் வைத்து வழியை ஏற்படுத்தினர். அப்பொழுது அவர்கள் அமைத்த குழாய் பாதை வழியாக நவம்பர் 28ஆம் தேதி 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து உத்தரகாண்ட் அரசு சார்பில் 12 எலி வளை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த ஊதியம் போதாது என்று எலிவளை தொழிலாளர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
ஏதேனும் கூடுதல் ஊதியம் வழங்காவிட்டால் காசோலையை அரசிடம் திருப்பி அளிப்போம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.





