பாஜக பிரமுகரின் சகோதரி திருமண விழாவில் திருட்டு..!
உளுந்தூர்பேட்டையில் பாஜக மாநில செயலாளரான அஸ்வந்தின் திருமண நிகழ்ச்சியின் பொழுது 15 லட்ச ரூபாய் நகை, பணம் வழங்கிய அன்பளிப்பு பையைத் தூக்கிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் அஸ்வந்தாமணி தாயாரிடம் உறவினர்கள் மற்றும் மற்றவர்கள் அன்பளிப்பாக கொடுத்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பயிர் காணாமல் போனதால் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
நகை, பணம் வைத்திருந்த பையை அமர்ந்திருந்த சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞரும் எடுத்துக் கொண்டு வேகமாக திருமண மண்டபத்தை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.





