--- --:--:-- --

இன்று முதல் 6 நாட்கள் மழை..!

2

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக இன்று முதல் 15 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

முன்னதாக, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால், திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆண்டிபாளையம் – கல்லூரி சாலையை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம், வெள்ள நீரில் மூழ்கியது. தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்ட நிலையில், தற்போது மேற்கு மாவட்டங்களில் கன மழை கொட்டி வருவது குறிப்பிடத்தக்கது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon