மகனை அடித்து கொன்ற மனைவி..!
தர்மபுரி அருகே இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரில் ஐந்து நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. இந்திரா நகரை சேர்ந்த ராஜீவ் – கனகா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
லாரி ஓட்டுனரான ராஜாவுக்கும், மனைவிக்கும்படி அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த மாத முப்பதாம் தேதி ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்பொழுது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனை தொடர்ந்து அவசர அவசரமாக ராஜாவின் உடலை மனைவி கனகா மற்றும் அவரது உறவினர்கள் அடக்கம் செய்ததாக சொல்லப்படுகிறது. 5 நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட உடலை போலீசார் தோண்டி எடுத்த நிலையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.





